சிந்தனைக் களம் ---- படித்ததில் பிடித்தது

ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் அவரவர் பாதையை தேர்வுசெய்கிறார்கள். ‘அனைவருமே இருபது வயதில் தேடுகிறார்கள், நாற்பது வயதில் சமாதானம் செய்துகொள்கிறார்கள்’ . கண்டடைகிறவர்கள் தங்களுக்குள்ளேயே கண்டடைகிறார்கள். குருக்களோ நூல்களோ அவர்களுக்கு பதில் சொல்வதில்லை, சிலசமயம் அவை உதவுகின்றன.
ஏன் இந்த தேடல் என்று கேட்டீர்கள். இந்த வினாவைக் கேட்கக்கூடிய மன அமைப்பு நமக்கு இருப்பதனால்தான். நாம் உணவை மட்டும் உண்பதில்லை, உணவைப்பற்றிய ஞானத்தையும் சேர்த்தே உண்கிறோம். வெறும் உணவை உண்பது வரை சிக்கலே இல்லை. ஆனால் நம் கோளத்தின் மிகமிக காலத்தால் பிந்திய பழங்குடிச்சமூகம் கூட பிரபஞ்ச கற்பனையை, கால உருவகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. மண்மீது மட்டுமல்ல தத்துவம் மீதும்தான் நிற்க வேண்டியிருக்கிறது. நான் சொல்வது சாதாரண மனிதர்களால். தத்துவமின்மையில் நிற்க சித்தர்களாலேயே முடியும்.

சாதாரண மனிதர்கள் மரபும்தர்கள் மரபும் மதமும் உருவாக்கியளித்துள்ள தத்துவங்கள் மீது முழுமையாக நம்பி நிற்கிறார்கள். அப்போது அவர்களுக்கு தேடல் இல்லை. அதன் கீழே நிற்க முடியாதவர்களுக்கு வேறு எவ்வளவோ தொலைவு சென்றாக வேண்டியிருக்கிறது.. ஞானம் தேடி ஓடு’ ‘ஞானமென்பதே முடிவற்ற பாடபேதங்களின் வரிசைதானே’
மனிதன் மீண்டும் மீண்டும் வினவிக் கொண்டே இருப்பான்.அவனது விடைகள் எத்தனை மகத்தான வடிவம் கொண்டாலும் அவை பிரபஞ்ச விரிவின் முன் சிறு துளியெ. ஓர் எறும்பு எத்தனை முயன்றாலும் அது வாழும் மலைத்தொடரை தன் உள்ளே வாங்கிக் கொள்ள முடியாது என்று ராமானுஜ பாஷ்யத்தில் வரும். ஆனால் ஏதோ ஒருவகையில் அது தன்னை மலையாகவும் உணர முடியும்.

ஏன் இந்த அளவுக்கு தத்துவங்கள்? நான் என்ன எண்ணுகிறேன் என்றால் தத்துவம் மூலம் மூளையை அதன் உச்ச எல்லை வரை கொண்டுசென்று உறையச் செய்தபின்னரே அடுத்த படியை எடுத்து வைக்க முடியும் என்பதனால்தான்.. தத்துவத்தின் உச்சியில் ஒரு கால் வைக்கத்தான் இடமிருக்கிறது. மறு கால் அந்தரத்தில் தவிக்கிறது

.

எழுதியவர் : (20-Mar-16, 3:48 am)
பார்வை : 93

மேலே