மூட்டு வலியை குணப்படுத்தும் திறன் பாரசிட்டமால் மருந்துக்கு இல்லை என்பது புதிததாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது

மூட்டு வலியை குணப்படுத்தும் திறன் பாரசிட்டமால் மருந்துக்கு இல்லை என்பது புதிததாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்விட்ஸர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 18 சதவீதம் பேரும், ஆண்களில் 9.6 சதவீதம் பேரும் ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி உடலின் இயக்கத்தை பாதிப்பதால், உடல் பருமன், இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் பொதுவான உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த 1980 முதல் 2015 வரையில் மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட 58,556 நோயாளிகளின் விவரங்களின் தொகுப்பின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிளாசிபோ மருந்துடன் ஒப்பிடும்போது, பாரசிட்டமால் மருந்தை பயன்படுத்தியவர்களுக்கு மூட்டு வலி குறைந்து உடலியக்கம் சற்று மேம்பட்டுள்ளது.

மூட்டு வலிக்கு ஸ்டீராய்டு அல்லாத மருந்துகளைக் குறுகிய காலத்திற்கே பயன்படுத்த முடியும். தொடர்ச்சியாக அதனை பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனுடன் ஒப்பிடும் போது டைக்ளோஃபினாக் மாத்திரைகளை தினமும் 150 மி.கி. என்ற அளவில் உட்கொள்ளும் போது மூட்டு வலிக்கு அதிக பயளிப்பதாக உள்ளது.

நீண்ட கால அடிப்படையில் ஸ்டீராய்டு மருந்துகளுக்கு மாற்றாக, பாரசிட்டமால் மருத்துவர்களால் வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், மருத்துவ ரீதியாக முழுமையாக மூட்டு வலியை குணப்படுத்துவதில் பாரசிட்டமால் மருந்துக்கு எந்த விதப் பங்கும் இல்லை என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் "தி லான்செட்' ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எழுதியவர் : (20-Mar-16, 8:21 am)
பார்வை : 38

மேலே