அழகிகளின் பிதாமகள்

பெண்ணே
நீ மஞ்சள் ஆடை
அணிந்து நடக்கும்
மஞ்சள் ஆறு

நீ தொட்டால் நான்
பொன் ஆவேன் கொஞ்சம்
தொட்டுப்பாரு

நீ கர்பத்தில் உருவான
சிற்பம்
நீயின்றி அனைத்தும் எனக்கு
அற்பம்

பிரம்மன் வீட்டு
அழகுப்புதயலை அள்ளிக்கொண்டு
பிறந்த வள்ளியே
அதனால்தான் உனக்குப்பிறகு
அழகிகள் பிறக்கவில்லையே

நீ ஐஸ்வர்யாராய் வீட்டு
ஐஸ்வர்யம்
கிளியோபாட்ரா வீட்டு
கிளி

ஒரு தேன்துளி கருவானது
அது பெண்ணாக உருவானது

நீ கையில் பேனா
வைத்திருக்கும் மைனா
நீ குயில் பொய்கையில்
பாடுகின்ற கானா

நீ காட்டில் பிறக்காது
நாட்டில் பிறந்த மான்
நீ கூட்டிலிருந்து
அன்னை வயிற்றில்
விழுந்த தேன்

நீ அழகிகளின் பிதாமகள்
அழகான பிதா
பெற்ற மகள்

காருக்கு ஒரு bmw போல
இந்த ஊருக்கு நீயே bmw ( beutiful and miracle woman )

நீ அ இ அ மு க வின் தலைவி
( அனைத்து இந்திய அழகிகள் முன்னேற்றக்கழகம் )

எழுதியவர் : குமார் (21-Mar-16, 9:54 am)
பார்வை : 189

மேலே