பிறப்பிற்கு அர்த்தம் சொல்வோம்

புசிப்பதற்கு உணவின்றி
பசிக்கிறது என்று
கையேந்தும் உருவத்தை
கண்டுகொள்ளாத உலகம்
ஊனமானதே


கந்தலாடை கரையில் கிழிய
ஒட்டிய வயிறு முட்டியாய்
முன் நீண்டு தாடை எலும்புகள்
தழும்புகளாய் மாற
தேகம் மெலிந்து
தேய்ந்து போன மனிதனை
கண்டு கொள்ளாத
மனிதம் மிருகமே


பட்டினிப்பிணியில் பரிதவித்து வாடும்
பிஞ்சுகளை எண்ணி நெஞ்சு நோகாமல்
பாலையும் தேனையும் சாமிக்கு படைக்கும்
சமயப் போக்கு சங்கடங்கள் நிறைந்ததே


உள்ளதை பகிர்ந்துண்டு
பசிப்பிணி போக்கி
உண்டிக்கு உணவழித்து
அகிலத்தில் அன்புபேசி


மனிதத்தை புனிதமாக்கி
புண்ணியத்தை புவியில்தேடும்
புதுயுகத்தை தோற்றுவிப்போம்
பிறப்பிற்கு அர்த்தம் சொல்வோம்

எழுதியவர் : சர்மிலா (21-Mar-16, 4:00 pm)
பார்வை : 97

மேலே