இனிமை

துன்பங்களை சந்திக்கலாம்
இன்பத்தின் சாரல் இருந்தால்

காயங்களை ஆற்றலாம்
கனிவான வாய்மொழியினால்

சோகங்களை விரட்டலாம்
சுமை குறைக்கும் நட்பிருந்தால்

கண்ணீரும் இனிக்கலாம்
தடை போடும் கரங்களால்

பாலையான மனதிலும் பசுமை தோன்றலாம்
மழையென வாழ்க்கைத்துணை இருந்தால்.

எழுதியவர் : தேன்மொழி (24-Mar-16, 3:00 pm)
Tanglish : enimai
பார்வை : 104

மேலே