பழமொழிகளும் சொலவடைகளும் - ஊ வரிசை



ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்.
ஊசி முனையில் மூன்று குளம்
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
ஊமை சொப்பனம் கண்டாற் போல..
ஊருடன் ஒட்டி வாழ்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர்க்குருவியைக் கொல்ல இராமபாணமா வேணும்?
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே.
ஊர் சனங்களுக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று உபதேசிக்கும் ஒருவன், தன் மனைவி, மக்கள் அவன் ஊர் சனங்களுக்குச் சொன்னதற்கு நேரெதிராக, நடந்துக்கொண்டாலும் கண்டிக்காமல்/கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடும் இயல்பைக் குறித்துச் சொல்லப்படும் சொலவடை
ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

எழுதியவர் : மூலம் : தமிழ் இலக்கிய வலை - (30-Mar-16, 7:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 115

மேலே