கண்டதும் காதலுக்கு மரணம் தான் தண்டனையா

கருமேகமோ வானைச்சூழ...,
கண்கவரும் வானவில்லோ -அதன் மேல்
காதல் கொண்டு தூரிகை போட...

நானும் ஒதுங்கினேன் பழச்சாறு கடையிலே மழையை கண்டு. ...!

திடீரென மின்னலை கண்டேன். ..
திடுதிப்பென -அதுவும்
தொப்பரையாக நனைந்து. ...!
கார்முகில் கூந்தல் வைத்து. .
கைக்குட்டையால் தலையை மூடி. ..
கண்கள் இரண்டில் மறுண்ட பார்வை வைத்து. .

காதல் கடிதம் தீட்ட -அங்கே. .
காகிதங்கள் அவசியமில்லை. ..
கண்கள் நான்கும் போதுமே..-பல
காதல் கவிதைகள் தீட்டிடுமே...

மழையும் நின்றபாடில்லை..-எங்கள்
விழிகளும் கவிகள் பாடுவதை நிருத்தவில்லை.

மழையும் நின்று போனதடா....-அந்த
மயிலும் நடந்து போனாளடா-அந்த
மரண சாலையில். ..

கண் இமைக்கும் காலம் கூட இல்லை. ...-என்
கண் முன்னே கடந்து போனாள்
இந்த உலக வாழ்க்கையை விட்டே...


அவளை நான் கண்டது ஒரு
குற்றமா. .?
என்னை அவள் கண்டது ஒரு குற்றமா..?
கண்டதும் காதலுக்கு மரணம் தான் தண்டனையா..?

எழுதியவர் : மோகன் சிவா (4-Apr-16, 12:14 am)
பார்வை : 457

மேலே