என் கோடை நாட்கள்

திங்கள் முதல் வெள்ளிவரை
ஞாயிற்றின் கொடுமை
கண்கள் தொட்டு ஓடிவரும்
வியர்வையின் குளுமை
அதை அன்போடு துடைக்கும் எங்கள் தாய்மை .


ஓடியாடும் கால்களுக்கு
சூரியனின் சுவடு தெரியவில்லை ,
எதிராளி தோற்றதும் தலைகால் புரியவில்லை .
காக்கையும் என் வீட்டுக்காதாடியும் ஒன்று
வேகத்தில் ;
குடத்தின் தண்ணீரெல்லாம் வற்றுது என்
தாகத்தில் .


ஆட்டம் முடிந்தது ;கால்கள் கொதித்தது
தாய்போல் நின்றது மரத்தின் நிழல்
அருகில் கண்டேன் கற்கால காட்டுக்குயில்
ஐந்தடி என் நிழலில் இளைப்பாறியது
அந்த இயற்கை எழில்
அன்றுதான் உணர்ந்தேன்
உருவம் எதுவாயினும் ,உணர்வுகள் ஒன்றுதான் என்று .

எழுதியவர் : deepthi (5-Apr-16, 5:06 pm)
Tanglish : en kodai nadkal
பார்வை : 104

மேலே