என்னவளுக்கு ஒரு முத்தம்

மழைத்துளி மீது
கோவம்தான்!
என் அனுமதியின்றி,
என்னவளுக்கு
ஒரு முத்தம்!

மயிலறகு போன்ற
உன் கருங்கூந்தல்!
என் மார்பின் வழி செல்லும் போது
அடைந்தேனே பிறவி பயன்!

வண்ணத்து பூச்சியின் மீது,
சிறு வருத்தம்தான்,
அழகு சிலையின் மீது,
சிறு ஓவியம்
பதித்ததற்கு!

உன்னை தீண்டும்
அனைத்து முயற்சிகளும்
தோற்றபின்,
பொய்யாக ஜோதிடம் பார்த்து,
உணர்வற்ற என் நகங்களுக்கு,
உயிர் கொடுத்தேன்!

நீ சிரித்த
ஒவ்வொரு நொடிகளும்
செய்வதறியாது,
காதல் எனும் சிறையில்
அடைந்தேன்,
ஆயுள் கைதியாக!

கோடை வெயிலிலும்
இதமான காற்று
எனக்கு இம்சையான
எதிரிதான்!

எங்கே உன் உடைகளுக்கு
நொடி பொழுதில்
விடுதலை கொடுத்து
காட்சி பொருளாக
மாற்றிடுவானோ என்று!

உன் கண்ணில் வரும்
கடல் நீரை
ஒரு போதும்
விரும்பியது இல்லை!

இதழ் வழியே வரும்
அமுதத்தை தான்,
எப்போதும் விரும்புகிறேன்!
நீ,
விரும்பினால்!

எழுதியவர் : Sherish பிரபு (5-Apr-16, 4:56 pm)
பார்வை : 2124

மேலே