என்னவோ செய்கிறது
ஒரே ஒரு கவிதை
எழுதத்தான் போனேன்
அடர்வனத்தின் வெளியே
ஒரே ஒரு கோவில்..
அதைத் தாண்டி
ஒற்றையடிப் பாதையில்
முன்னேறிட..
ஒரே ஒரு கவிதை
தோன்றியது
உடனே எழுத..
திரும்ப வழி தெரியாத
மலையின் அடர்வனத்தில்
இன்னும் மேலும் கீழுமாய்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன்..
முன்பு பார்த்த
கோவிலையும் காணவில்லை
அடர்வனத்தின் முன்னே..
ஒ..இது வனத்தின்
அடுத்த பக்கமோ..
யார் சொல்வார்கள்
யாருமில்லாத இந்த
காட்டில்..
இப்படியாக
சென்று வந்ததை
அப்படியே எழுதினேன்..
அவ்வளவுதான்..
இந்தக் கவிதை .. தன்னை
என்னவோ செய்கிறது என்று
சொல்லிப் போகிறார்..
சற்று முன்பு கசக்கி
நான் கீழே போட்ட
இந்த வரிகள் கொண்ட தாளை
எடுத்த ஒரு நல்லவர் !