பழைய வானம் புதிய பறவை

பழைய வானம் புதிய பறவை

துணைவன் இறந்ததும்
துன்பத்தில் துடித்ததும்
காலங்கள் நகர்ந்ததும்
கனவுகள் கலைந்ததும்

நிரைத்த முடியில் நினைவுகள்
சுமந்து
கறுத்த முடியில் கனவுகள்
சுமந்து
வாழ்ந்தது பெண்மை

காலங்கள் நகர
காரணங்கள் பெருக
கண்ணோட்டம் மாறுபட

பாவை பறவையாகி
கவலை காகிதமாகி
துணிவை அடையாளமாக்கி
வாழ்வது பெண்மை

பழைய வானம்
நிலைபெறா தருணம்
புதிய நேரம்

மேகங்களின் புதுமையில்
வானம் நகர்கையில்
பெண்களின் நிலைமையில்
புதிய எண்ணம் மலர்கையில்

சரித்திரம் மாறப்பெற்றது
பெண்மை இனம் புதுமை பெற்றது
பழைய வானம் மாற்றப்பட்டது
புதிய பறவை பறந்து கொண்டிருக்கிறது

(தலைப்பு எழுத்துத் தள தோழர் வழங்கினார்)

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (10-Apr-16, 4:49 pm)
பார்வை : 323

மேலே