காதலாகிக்கசிந்தேன்
அழகு என்ற வார்த்தையினை
எனக்கு அறிமுகப்படுத்தியவளே,
ஒற்றைக்கல் மூக்குத்தியதில்
ஜொலிப்பை காட்டி
நீ ஜல்லிக்கட்டுக்கு அழைத்தாயடி,
மாடு பிடிக்கும் வீரர்கள் மத்தியில்
என்னை மாட்டி விட்டாயடி..!
அழகு ஊர்வலம் போகையில்
ஆசையற்று ஒதுங்கி நிற்க முடியாத
ஆடவன் இனமடி,
நான் வாலியானேன்,
வந்து உன்னைப்பற்றி
சிந்து பாட கவிஞனானேன்...!
பேசாமடந்தை உன் விழிகளிலென்ன
பாடத்தெரியாதவனையும்
பாட்டெழுத வைக்கிறது....!
சீறி வந்த காளை எந்தன்
சிறகொடித்து ஸ்தம்பிக்கிறது,
கக்கத்தில் குளிர்கிறது,
காய்ச்சல் கண்களில் நிறைகிறது,
காதலாகி போனதால்
காதலனாகிநேனடி,
காதலாகி கசியுமுன்
கட்டுக்குள் வையடி, உந்தன்
கண்ணுக்குள் வையடி.
கைக்குள் அடங்குமந்த
காதலுக்குள் நம்மை நிறுத்தடி.
கைக்கொள்ளும் காதல்
கானல் நீராகுமுன்
பனிக்கண்ணில் பார்
பாசத்திவலையாக்கு,
பாரில் உலா வருகின்ற
பாசப்பறவைகளாய்
நாமும் இனி பாடித்திரிவோம்...
பார் என்னை பார்,
சேர் வந்து என்னைச்சேர்.
காதல் ஊர்தியின் கடைசிப்பெட்டி நமக்கென
காத்திருக்கிறது,
காலம் தாழ்த்தினால் காதல் நம்மை
கடந்து போகப்பார்த்திருக்கிறது,
வா, வா, சீக்கிரம்,
காதல் பதிவு இது,
காதலை வேண்டியபடி இனி இது.!.