விலைமகள்

களையிழந்த தேகம்!
கண்களின் ஓரம் ஈரம்!!
வலுவிழந்த சொற்கள்!
தெளிவிழந்த எண்ணங்கள்!!
தெரு பொறுக்கும்
நாய்களின் கொஞ்சல்
அரைமணி நேரம்!
தெருவாசிகளின்
வசைபாடல்கள்
ஆறு மணி நேரம்!
சுத்தம் செய்ய குளியல்!
மீண்டும் மீண்டும் அசுத்தம்?
விலைமகள்!
என வாழ்க்கை இது? என்று
எண்ணியபொழுது,
காமசுகம் தேடி வரும் கயவன்,
கண்களில் மோகவெறி!
இச்சைகளை
நொடி பொழுதில் நிறைவேற்றி,
வெற்றி களிப்பில்
மூழ்கி வெளியேறுகிறான்!
வலுவிழந்த சோகத்துடன்
அன்னநடை
நடக்கையில் ,
அங்கும்
ஒருவனின் சைகை!
என்ன செய்ய? என்று
இவள் நினைத்து
மீண்டும் ஒரு குளியல்?
எத்தனை முறை
குளிப்பாள்?
இந்த விலைமகள்?
இல்லை,
விலைபோகும் மகள்!