வாழையடி வாழையா வாழணும் நாம

எந்நேரமும்
எந்த காலமும்
என்றும்
என்னில் நீயே
முதன்மை செய்தியடி

யாசகம் கேட்கிறேன்
உன்னில் வாசகன் நானடி
நானேயடி

அதிகாலையில்
பிரபா வரும் வேளையில்
தேனீர் கோப்பையுடன் நீயடி

தினம் தினம்
சுடசுட
சமைக்கிறாய்
எனை தாளித்து

தினம் தினம்
மலரும் மலரடி
நீயடி
உன் திருவடி
பணிவேன் நாளும்
நானடி


பூவுக்குள்
பூகம்பம்
பூகம்பத்தில்
பூக்காம்பும்
தருபவள் நீயடி

நீ இல்லா பகல் இல்லை
நீ இல்லா இரவில்லை
நீ இல்லா எதுவும் எனக்கு இல்லை

பத்தமட பாயி
தூக்கம் தரவில்ல
திண்டுக்கல்லு பூட்டு
பூட்டதானே மறந்து
காத்துகிட்டு
ஒத்தையில தவிச்சிட்டு கெடக்கன்
கால நேரம் என்ன கொல்லுதே
கால நேரம் என்ன
கொல்லுதே

பங்கு சந்த நிலவரம் ஏறிபோச்சி தானே

நீ இல்லா நேரம் வீழ்ந்துபுட்டன் நானே


சுவத்துல பல்லி
என் மேல தான் கள்ளி
பத்த(தி)ரமா பாத்துப்பன்
என் கூடதான் வாடி

வாழையடி வாழையா உன்னோட தான் நானு
மண்ணோடு மண்ணா
போனாலும் தான்டா

இருக்கட்டும் விடுடி
இம்புட்டு பாசம்
மூச்சடச்சி போயிடும்
போலருக்கு
அடியே
எனக்கு
மூச்சடச்சி போயிடும்
போலருக்கு



அள்ளிக்கொள்ள
நீ தான் பக்கத்துல இருக்க
தள்ளிபோக எனக்கு
தோணுமா சொல்லடி
காதல் கண்மணி

உயிரினை
மெத்தையாக்கி
உடலினை
போர்வையாக்கி
சாஞ்சிபுட்டா என்னில்
சாச்சிபுட்டா என்னை
இதயத்தில் கத்தியுடன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Apr-16, 12:10 am)
பார்வை : 90

மேலே