ஒரு செய்தி இரு கவிதை

பெண்கள் கர்ப்பக கிரகத்தில் சென்று சனி பகவானை தொழலாம் இனி .

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

சுற்றியுன் பக்கத்தில் எட்டுபேரி ருந்தாலும்
சுற்றியுனை மட்டும்வந் தார்சில பெண்மணிகள்
சுட்டெரிக்கும் வேனலில் கட்டியுனைப் பார்த்ததுமே
சுட்டுவிட மாட்டாயா நீ

என்று நான் வினா விடுக்க சனி பகவன் அதற்களித்த விடை ..

வெண்கலிப்பா ..

சுற்றியென் பக்கத்தில் எட்டுபேரி ருந்தாலும்
சுற்றியெனை மட்டும்வந் தார்சில பெண்மணிகள்
சுட்டெரிக்கும் வேனலில் கட்டியெனைப் பார்த்தாலும்
சுட்டுவிட மாட்டேன்பெண் மேனி

எழுதியவர் : (23-Apr-16, 9:51 pm)
பார்வை : 43

மேலே