எங்கு தேடுவேன் என் தந்தையை..
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்வின் ஒரு நொடியை கூட வாழவில்லை...
கடமை ஆற்றி ஆற்றியே கலைத்துப்போனாய்..
நண்பர்கள் மனச்சுமை எல்லாம் பணம் கொண்டு களைந்தாய்..
அவர் தம் தந்தையின் பினம் கூட நான்கில் ஒருவனாய் சுமந்தாய்..
தமை சுமந்த தந்தையின் கைகளை முத்தமிட்டும்..
ஓடி ஓடி உழைத்து வந்தக் பாதங்களைக் கண்ணீரால் கழுவியும்..
தந்தையர் தின வாழ்த்தைக் கூறித் தழுவிக்கொள்ளும் இன் நன்னாளில்..
விழுந்து அழக் கூட உன் கல்லறை இல்லாத பட்சத்தில்..
பதில் பெற முடிய இம்மடலை எங்கே சென்று சமர்பிப்பேன்..?
கொல்லி சுமக்கும் வலி கூடத் தராமல் சென்றுவிட்ட உன்னை..
எங்கு தேடி என் அன்பை உரைப்பேன்..?
என் தாயை மனத்ததனால் சொர்கத்திலா..? இல்லை..
எனை ஈன்றெடுத்ததனால் நரகத்திலா..?