உழைப்பாளி

இன்று மே முதல் தினம்!
உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும்
ஓய்வுடன் மரியாதையும் கொடுத்து
கௌரவிக்கும் தினம்!
நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையில்
உழைப்பாளிதான்!
உடல் உழைப்போ மூளை உழைப்போ
உழைப்பாளிதான்!
நாம் அனைவரும் இன்று ஓய்வெடுப்போம்!
இன்று மதியம் தகிக்கும் வெயிலில்
வீட்டில் நிழலில் ஓய்வெடுப்போம்!
ஓய்வெடுக்கும்போதே ஒன்று செய்ய சங்கற்பம் ஏற்போம்!
அதாவது....!
ஓய்வெடுப்போம்! ஆனால் உறங்குவதற்குப் பதிலாக .....
சங்கற்பம் ஒன்று.......
ஏழைத் தொழிலாளர்கள் அல்லது உழைப்பாளிகள்
வாழ்க்கைத் தரம் உயர பிரார்த்திப்போம் இறைவனை!
சங்கற்பம் இரண்டு......
நம் வாழ்வின் உயர்வில்
ஒவ்வொரு துறையிலும் உள்ள ஏழைத் தொழிலாளியின்
பங்கு அல்லது முக்கியத்துவத்தை ஆழ்ந்து நினைப்போம்!
நன்றியுடன் நினைவு கூர்வோம்!
இந்த இரண்டு சங்கற்பங்களையும்
பன்னிரண்டு மணி முதல் ஐந்து மணி வரை தொடரும் மதியத்தில்
அவரவர்க்கு உகந்த நேரத்தில் நிறைவேற்றுவோம்!
நேரத் தேர்வு அவரவர் விருப்பம்!
ஏன் மதியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?
இந்த மதியத்தின் தகிக்கும் வெயிலில்தானே
ஏழைத் தொழிலாளிகள் குறைந்த ஊதியத்துக்கு
வியர்வை சிந்தி உழைக்கிறார்கள்!
ஆலைத் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளி,
சுரங்கத் தொழிலாளி, முடிவெட்டும் தொழிலாளி,
வயலில் உழும் விவசாயி, சுகாதார தொழிலாளி
எந்தத் துறைத் தொழிலாளி
நம் வாழ்வை உயர்த்தவில்லை?
வெயிலில் மட்டுமா? ... மழையிலும்
எந்த துன்பத்தின் நடுவிலும் அன்றோ
அயராது உழைக்கிறார்கள்!
மதியத்துக்கு காத்திருப்போம்!
நன்றியுடன் வாழ்த்த!
ஒன்றுபட்டு பிரார்த்திக்க!

எழுதியவர் : ம கைலாஸ் (1-May-16, 11:38 am)
Tanglish : uzhaippaali
பார்வை : 493

மேலே