சுருக்கங்கள் சில - ஹைக்கூ

அடி பெற்றவன்
ஆட்சி செய்கிறான்
கருங்கல் தெய்வம் !

திசை மாறி போனது
என் பயணம்
வெள்ளபெருக்கு !

விரிசலில்
வீடு
சிலந்தி வலை !

மதுக்கடையின்
நண்பன்
காவல்துறை !

வரிசையில் மனிதர்கள்
செய்தி
நிழல்கள் விற்பனைக்கு !

சாதித்தது
தமிழகம்
நிலவில் டாஸ்மாக் !

ஏலியன்கள் படையெடுப்பு
தமிழகத்தில்
மதுவிலக்கு !

எழுதியவர் : தங்கதுரை (7-May-16, 1:40 pm)
பார்வை : 151

மேலே