பெண்களின் சுதந்திரம் -- பொதுவாழ்வில் -- கவியரங்கம்
தமிழ் வணக்கம் :-
செந்தமிழ் போற்றிடு வாயே -- வாழ்வில்
செல்வங்கள் சேர்ந்திடும் நம்பிடு வாயே .
செம்மையாய்ப் பாவியற்ற வேண்டும் -- நாளும்
செப்பிடும் நன்னெறி பற்றுதல் வேண்டும் .
தலைமை வணக்கம் :-
முற்றத்தின் தலைமை போற்றி -- இன்று
கற்றதன் பலனை ஏற்றி -- தினம்
பற்றுடன் வாழ்ந்திட வேண்டும் -- உயர்
உற்றதும் சேர்ந்திட உன்னதம் வேண்டும் .
அவையடக்கம் :-
நிலவின் மடியில் நின்றிட நாளும்
உலவும் கவியில் உணர்வின் சீர்கள்
பலவும் போற்றி பந்தம் சேர்க்கச்
சிலரின் பார்வை சிந்தையை அள்ளும்.
பெண்களுக்குச் சுதந்திரம் -- பொதுவாழ்வில் .
பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் .
பொதுவாழ்வில் ஈடுபடல் வேண்டும் .
கண்களெனப் பாதுகாத்தல் வேண்டும் .
கருத்தோங்க வாழ்ந்திடவும் வேண்டும் .
அடுப்பூதும் நிலைமாறிட வேண்டும் .
ஆடவர்க்கு நிகரெனமாறிட வேண்டும் .
பெண்ணடிமை நீங்கிடல் வேண்டும் .
பெண்ணினம் ஓங்கிட வேண்டும் .
சாதனைகள் புரிந்திடல் வேண்டும் .
சமுதாயம் நிலைபெற வேண்டும் .
சுதந்திரம் கிடைத்திடல் வேண்டும் .
சுகமதை பெற்றிடல் வேண்டும் .
நன்றியுரை:-
நன்றிகள் சொல்லிடு வேன் -- நாடு
நன்மைகள் பெற்றிட வேண்டிடு வேன்.
நன்னெறி சொல்லிடும் முற்றம் -- நாளும்
நல்கியும் பல்கியும் வேண்டிடும் சுற்றம் .