ஒரு நிமிடக்கதை - பைலட்

திருமண நாள் அன்று சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லி விட்டு வேலைக்கு சென்ற பைலட், அதிக வேலைப்பளுவால் தாமதாக வருகிறார்...

சுவாதி (கொடூரக் கோபத்துடன்) : ஏன் லேட்? இந்த ஒரு நாள் கூட உங்களால சீக்கிரம் வர முடியாதா?

பைலட் : அது வந்துமா நான்........

சுவாதி : வாயை மூடுங்க,,, நான் என்ன அப்படி பெருசா கேட்டுட்டேன், மற்ற பொண்ணுங்கள மாதிரி நகை வேணும், புடவை வேணும்னா நச்சரிச்சேன், கோவில் போகலாம்னு தானே சொன்னேன்!!!

பைலட் : அப்படியில்லை மா,,, நான் வந்து.....

சுவாதி : பேசாதீங்க,,, உங்களுக்கு சமாளிக்கவா தெரியாது... அப்படித்தானே இத்தனை வருஷம் ஏமாத்திட்டு இருக்கீங்க!!!

பைலட் : ..........................

சுவாதி : வாயைத் திறந்து ஏதாவது பேசுங்களேன், வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க...

எழுதியவர் : செல்வமணி (8-May-16, 12:40 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 180

மேலே