நான்

ஆழ் மனதின் ஆழத்தில்
சிறைபிடிக்கப்பட்ட பெட்டிக்குள்
விழித்து கொண்டு உறங்கியது
அந்த நான் ...
ஒவ்வொரு முறையும்
பெட்டியின் ஜன்னல்களில்
மெதுவாக அவிழ்க்கபடுகிறது
அந்த நான்....
கடந்து போன பக்கங்களில்
தன்னை கடத்தி
சரிவர நரப்பிகொள்கிறது
அந்த நான் ...
தேங்கிய நினைவுகளில்
முற்களில் பூவார்த்து
எச்சமாய் மிச்சமானது
அந்த நான்....
அறைந்த சிலுவையில்
மறைந்து போன
ரேகையாய் விரித்தது
அந்த நான் ...
கனவுகளை கயிராக்கி
கற்பனைகளை கடந்தோடி
காலங்களை தைத்துகொண்டது
அந்த நான்...
இவையெல்லாம் உதறிக்கொண்டு
கடக்க முற்படும்போது
தெளிந்து கொண்டேன் கல்லறையில்
நான்...