காதலே மாயம் காதலே மாயம்

காதலே மாயம் இந்தக் காதலே மாயம் .
காதலே மாயம் இந்தக் காதலே மாயம்
திரை பின்னே நின்றே நோக்கின் காணும்
திசையெல்லாம் உந்தன் நினைவு நிலைக்காதம்மா .
என்னோடு யார் வாழ்வது ? நான் போகும் போது
என்னோடு யார் வருவது ?
( காதலே மாயம் ... )


எங்கே என்றன் காதல் தேவதை
நின்றே தேடுது என்றன் நெஞ்சமோ
காதல் வரை வந்த நீயும் என்னை
விட்டு சென்றதேனோ கண்ணே !
உன்னாலே வந்தது . உன்னாலே சென்றது .
.உன்னாலே வந்தது . உன்னாலே சென்றது .
காதல் நிஜமென்று யார் சொன்னது ?

( காதல் மாயம் .... )


இருந்தாலும் காதல் சொல்வேனடி இறந்தாலும்
காதல் கொள்வேனடி .
நம் காதல் நிலையானதா ? நிஜமானதா ?
என்னோடு வந்தது . என்னோடு செல்வது .
என்னோடு வந்தது . என்னோடு செல்வது .
காதல் நிஜமென்று யார் சொன்னது ?

( காதலே மாயம் .... )


நம் காதல் கனவாகிப் போகுதம்மா .
நிஜத்தைத் தேடும் நிழலாய் வந்திடும்
நம் காதல் கனவாகிப் போகுதம்மா .
காதல் பயணம் பலனற்றுப் போகுதம்மா .
நீ தந்த சொந்தம் இன்று நிம்மதி
இன்றியே தோல்வியால் வாடும் நேரமம்மா.

( காதலே மாயம் ... )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-May-16, 5:35 pm)
பார்வை : 163

மேலே