காலைத் தென்றல் இரவு வானம் நடுவில் நாம் முடிவிலும் நாம்

கணவன் மனைவி ஊடல்
( செல்ல சண்டை = தலையணை சண்டை )
மனைவி :
ஹலோ சார் இன்னுமா தூங்கறீங்க.
எழுந்துருங்க.
எழுந்திருச்சி பல் விலக்கிட்டு குளிச்சிட்டு வாங்க காஃபி குடிக்கலாம்
கணவன் :
5 நிமிஷம் செல்லம்.மாமா போய்ட்டு எப்டி வர்றன்றத மட்டும் பாரு.
மனைவி :
பேசனது போதும் போய்ட்டு குளிங்க.
கணவன் :
நான் வந்துட்டன்.
மனைவி :
இவ்ளோ சீக்கிரமாவா?
கணவன் :
மேடம் பொம்பளைங்க கெளம்ப தான்
ஒரு நாள் எடுத்திப்பீங்க.எங்களுக்கு
10 நிமிஷமே போதும்.
மனைவி:
போதும் போதும். உள்ள போய்ட்டு உண்மையாலுமே குளிச்சீங்களா.
கணவன் :
ம்ம்ம். என்னபாத்தா குளிக்காத மாதிரியா தெரியுது. பேப்பரும்
காஃபியும் எடுத்துட்டு வா
மனைவி : பேப்பர் நான் படிக்க போறன்.
நீங்க காஃபி குடிங்க.
கணவன் :இவ்ளோ நேரமா பேப்பர் உன் கைல தான இருந்துது படிச்சிருக்க வேண்டியது தானே
மனைவி :
உங்கள எழுப்பவே நேரம் சரியா இருந்துது.அப்றம் எங்கருந்து பேப்பர் படிக்கறது.
சரி ஒரு போட்டி வச்சிக்கலாம்
அதல யாரு ஜெயிக்கறாங்களோ
அவங்களே பேப்பர முதல்ல படிக்கலாம்.
கணவன் :
ம்ம்ம் ஓகே. டன்.
~~~~~~~~~~~~~~~~~~~~
மனைவி : மாமா
ஆண்கள விட பெண்களுக்கு தான் கற்பனை வளம் அதிகனு சொல்றன்
கணவன் :
இல்லவே இல்ல.ஆண்களுக்கு தான் கற்பனை வளம் ஜாஸ்தி.
மனைவி :
சரி மாமா . உங்க கற்பனை குதிரைய கொஞ்சம் ஓட விட்டு தான்காட்டுங்களேன் பாப்போம்.
கணவன் :
நீ தானே மூங்கில் தோட்டம்
நான் தானே புன்னகை தேசம்
புல்லாங்குழல் ஆவேன் உன்கையில்
மனைவி :
(விழியின் ஓரம் பனித்துளி)
மாமா .வைரமுத்து வாலி சார் வரிய எதுனா சுட்டுட்டியா.
கணவன் :
அடியே நான் ஏன்டி திருடணும்.
ஒரு கவிதை தோட்டமே எதிர்ல
மூச்சு விட்டுட்டு என் மேல சாஞ்சிட்ருக்கும் போது.
மனைவி :
மாமா Chanceye இல்ல .
முடியல என்னால.
புடிச்சிக்க மாமா
மயங்கிடுவன் போலருக்கு.
கணவன் :
மயக்கம் அது இதுனு சொல்லி தப்பிச்சிடலாம்னு பாக்கறீயா.
ஒழுங்கா கவிதை சொல்லு.
மனைவி :
மாமா நீங்களே பேப்பர படிங்க மாமா.
கணவன் :
பேப்பர்லாம் இருக்கட்டும்.கவிதைக்கு வா நீ.சரி என் கவிதை எப்படி இருந்துதுனு நீ சொல்லவே இல்லயேடி
மனைவி :
அத வேற சொல்லணுமா மாமா.
நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சன பண்றன்.
கணவன் :
உன்ன பத்தி எனக்கு தெரியும்டி.
டைரி முழுக்க எழுதி வைக்கற.
இப்ப ஒரு 2 வரி சொல்லமுடியலயா.
மனைவி :
மாமா நீங்க எனக்காக சொன்ன கவிதை
எல்லாத்தையும் விட பெருசு மாமா.
அந்த பாசத்துக்கூட போய்ட்டு என்னால எப்டி மாமா சண்ட போட முடியும்.
மாமா என்ன நெனச்சு தான சொன்னீங்க.
கணவன் :
எனக்காக ஒரு ரெண்டு வரி சொல்லுடி
மனைவி :
மாமா
வார்த்த வரமாட்டேங்குது
மாமா
இந்த நிமிஷம் நீளட்டும்
உசுருகிட்ட பேசிக்கிறன்
உடம்புல உன்ன வாங்கிக்கறன்
இப்படியே வாழலாம் மாமா
கணவன் :
(மனைவியை தூக்கிக்கொண்டு )
I Love You டி
மனைவி :
(முத்தங்கள் வைத்து )
நாளையும் பேப்பர் சண்டை வேணும் மாமா.....
(உங்கள் மார்போடு வாழ்வேன் நாளும்)
~ பிரபாவதி வீரமுத்து