நீராகிறேன்
நிலத்தின் கதகதப்பில்
நீராய் கொதிக்கிறேன்
நீர் நீ நீராவியாய்
வான் மேகம் தடுப்பணையாய்
நீராவி நீ நானாகிறேன்
நான் நீராகிறேன்
நீராகிறேன் .......
~ பிரபாவதி வீரமுத்து
**
இரவெல்லாம் மாரோடு
பகலெல்லாம் நினைவோடு
வாழ்வெல்லாம் உன்னோடு
உன் கண்ணில் என் கூடு
என் கண்ணில் என் நாடு
வாழ்வோம் நாம் எல்லைகள் உடைத்து விண்ணோடு
~ பிரபாவதி வீரமுத்து