தலைமைத் தொழிலுழவைத் தாங்கு
தாங்கும் நிலமுழுதும் தாங்கா பசிதீர்க்க
தாங்குங் கலப்பையினை தாங்கிடுவார் -ஓங்கும்
தலைமையே செங்கோலைத் தாங்குதல்போல் வையத்
தலைமைத் தொழிலுழவைத் தாங்கு.
***************************************************************
தாங்கு எனத் தொடங்கி தாங்கு என வெண்பா முடிவதால் இதை அந்தாதி வெண்பா எனலாம்
தாங்கும் நிலமுழுதும்-தாங்கும் நிலம் +உழுதும் என்றும் நிலமுழுதும் என்றும் பொருள்காணலாம்
இது நம் உரத்த சிந்தனைக்கு