நீரோ

ஒவ்வொரு முறையும்
மீனாகிட தவிக்கிறது
அலை...
அப்படியே அலை தீண்ட
தப்பிக்கும் உன் கால்களும்...
----------------------------------------------

ஊர் பற்றி எரிகிறது
செல்பி எடுத்துக் கொண்டிருந்தான்
பிடில் போரடித்திருந்த
நீரோ...
-------------------------------------------------------

மொட்டைமாடி யானையென
தண்ணீர் தொட்டி
நிற்கிறது...
மறைந்து நின்று
மூச்சு வாங்குகிறது
நம் முத்தம்....
------------------------------------------------------

ஒளிந்து விளையாடும்
விளையாட்டை இன்னுமா
விளையாடுகிறாய்...
தேடிக் கொண்டேயிருக்கிறேன்...
---------------------------------------------------------

அத்தனை நேரம்
குளித்து விட்டு வந்தாள்
ஆனாலும் ஆங்காங்கே
அப்பியிருந்தன
அலுவலக நேரத்து கண்கள் சில...
----------------------------------------------------------

மொட்டைமாடி துணிகளை
வேண்டுமென்றே
நனைய விட்டிருந்தவள்
என்னோடு நனைந்து
கொண்டிருப்பதாக நம்பிய
முதல் மழையில்
பனிக்கட்டிகளாய்
சிதறினாள்...
--------------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (28-May-16, 11:08 am)
Tanglish : neero
பார்வை : 127

மேலே