வாழ்வும் சாவும்

மனிதன் இறக்கிறான்
உயிர் பிரிகிறது
உடல் கிடக்கறது.

துக்க வேளையில்
நல்லது பேசப்பட்டு
கெடுதல் விடப்படுகிறது.


நாட்கள் செல்ல
மாறுகிறது
பேச்சுக்கள்.

நரம்பில்லா நாக்கு
கூடவும் பேசுகிறது
குறையவும் பேசுகிறது.

வாழ்வின் அழகை
புகழ்ச்சி மெருகுட்டுகிறது
இகழ்ச்சி விகாரப்படுத்துகிறது.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-May-16, 10:22 am)
பார்வை : 1432

மேலே