எது காதல்

கண்ணை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?
நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
கருப்பானவர்களுக்கு காதல் வராதா?
அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?
பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா ?
பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால்
பேச இயலாதவனுக்கு காதல் வராதா?
படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால் படிக்காதவனுக்கு காதல் வராதா?
உண்மையில் காதல் என்பது என்ன?
அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான உறவுக்கு பெயர் தான் "காதல்"

எழுதியவர் : கவிதைப் பூங்கா (8-Jun-16, 8:24 am)
பார்வை : 139

மேலே