வேதனை

விவரம் கெட்ட உலகம் இது
நல்லோர் வாழ வழியே இல்லை
தவறு செய்வோர் தளைத்து வளர‌
நெறியாய் வாழ்வோர் தளர்ந்தே வாழ்வர்

குறுக்கு வழியினருக்கு கும்பிடுபோடும் உலகம்
நேர்வழி செல்வோரை நசுக்க எத்தனிக்கிறது
குப்பையில் கிடக்கவேண்டியோர் கோபுரத்தில் இருக்க‌
போற்றப்பட வேண்டியோரோ புதைக்கப்பட்டு கொண்டுள்ளர்

வீரம்விளைஞ்ச மண்ணில் பணமே முதலிடம்
உண்மை ஜொலிக்காமல் பொய்மை தலைவிரித்தாடுகிறது
எதற்கெடுத்தாலும் ஊழல் எமனே முன்னிலையில்
உரிமைகள் பறிக்கப்பட்டு கழுவிலேற்றப் படுகிறதுஜனநாயகம்

மிஞ்சி நிற்பது வேதனை மட்டுமே
கெஞ்சி நிற்குது பாரம்பாரியமும் கலாச்சாரமும்
முன்னேறிக் கொண்டுள்ளதாய் மாயப் படுத்தப்பட்டு
கற்காலம் நோக்கி விரைகிறது மனிதஜடம்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Jun-16, 7:24 am)
Tanglish : vethanai
பார்வை : 561

மேலே