ஒரு 2 டீ காகிதப் புள்ளின் பயணம்

இது ஒரு
2 டீ காகிதப் புள்

சிறகில்லை, வாலுண்டு ;,

நெற்றியில் குஞ்சலமும் உண்டு ,

வலுவான நூலால் கட்டுண்டு

வாடைக் காற்று வீசுது இப்போது

மொட்டை மாடியில் இருந்து

மெல்ல மெல்ல ஒருவன்

அக் காகிதப் பறவையை

வான் நோக்கி பறக்க விட்டான்

காற்றின் போக்கோடு அதை

உயர உயர பறக்கவிட்டான்

விந்தையாய் வெகு நேர்த்தியாய்

மேலும் கீழுமாய்

இடம் வலமாய் பறந்தது பறவை

வெகு நேர்த்தியாய் !எங்கிருந்தோ வேகமாய் வந்து

வானிலே வட்டமிட்டது ஒரு பருந்து

இந்த காகிதப் புள்ளை

ஒரு விந்தைப் பறவை என்று

எண்ணியது போலும் ! அக்கணமே

பளிச்சென்று மின்னல்போல் அதை

தாக்கியது ; அந்தோ நம் 2 டீ புள்

உருவில்லாமல் சிதையுண்டது .

கொத்திய அலகில்

மாமிசமில்லை எலும்புமில்லை

ஏன் என்று புரியாது பருந்து

விரக்தியில் மேல் எழுந்து பறந்தது

பறந்து கண்ணுக்கு தெரியாமல்

மறைந்து போனது !

2 டீ காகிதப்பை புள்

நூலில் இருந்து விடுபட்டு

பின்னமாய் அங்கோர்

மின்சார கம்பியில்

மாட்டிக் கொண்டது !

அதன் பயணம் முடிந்தது .

எழுதியவர் : (25-Jun-16, 2:41 pm)
பார்வை : 216

மேலே