ரத்தவெறி கொண்ட பெண்---
[ரத்தவெறி கொண்ட பெண் கொசுக்கள்!]
##@#@@###@@@@@@#####@@
கொசுக்களின் வம்ச வரலாறு!
- கே. என். ராமச்சந்திரன்
அறிவியல் கட்டுரையாளர்
@@@@###@@@@@@@@@@
கொசுக்களை அடியோடு அழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
@@@@
கொசுவுக்கு ரத்த தானம் செய்யாத உயிரினமே உலகில் இல்லை. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரையுள்ள எல்லா இடங்களிலும் கொசுக்கள் உண்டு. கொசுக்களுக்கு முதன்மையான உணவு தாவரங்களின் சாறுதான். ஆண் கொசு விலங்குகளைக் கடிப்பதில்லை. பெண் கொசுகளுக்குக்கூட ரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் [மனிதர்களை] விலங்குகளக் கடித்து ரத்தம் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது. ...
@####
.....ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டையிடும். ..ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது....... கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும். பல்வேறு பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் மீன்களுக்கும் தவளை போன்ற உயிரினங்களுக்கும் புரதம் செறிந்த உணவாகக் கொசுக்கள் அமைகின்றன. அவை முற்றாக அழிக்கப்பட்டால் அவற்றை உண்ணும் உயிரினங்களும் அழிந்துபோகலாம்.
@@@
இது 'தி இந்து' , தமிழ் நாளிதழில், திங்கள், ஜூன். 27,2016 அன்று நடுபக்கத்தில் உள்ள அருமையான கட்டுரை. என்னால் இதை முழுமையாக அச்சிட இயலவில்லை.'தி இந்து' சந்தாதாரராக இல்லாத நண்பர்கள் நூலகம் சென்றாவது இக்கட்டுரையில் உள்ள கொசுக்களைப் பற்றிய அருமையான அரிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@#######