தகராறு

உன்னை அறிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
உன் வார்த்தைகள் நம்பகத்தன்மை உள்ளவைபோல் தோன்றின.
நீயும் விவரமானவன் ; பிம்பம் கலைவதை
விரும்ப மாட்டாய் என்றிருந்தேன்.
இப்படியேதான் நீ எல்லோரிடமும் பேணி வந்திருக்கிறாய்.
ஒரே ஒருவர் தான் சொன்னார் ; நான் நம்பவில்லை.
மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்;

பின்னால் கேட்டபோது சொன்னார்கள்;
நமக்கெதற்கு வம்பு?
பெரும்பாலும் இப்படித்தான்
இருக்கிறார்கள் என்று.

இது பொறுக்கலாமா?
இடம்,பொருள்,ஏவல்,இடக்கரடக்கல்
இங்கிதம்,நாகரிகம்
சக மனிதனோடு தகராறு வேண்டாம் என்கிறதா?

எழுதியவர் : கனவுதாசன் (5-Jul-16, 6:51 pm)
Tanglish : thagaraaru
பார்வை : 78

மேலே