வருவாயா
வெண்ணிலவின் கரை
துடைக்க உன் கைகள்
வேண்டும் தருவாயா....
சூரியனை சிறை பிடிக்க
உன் துப்பட்டா
வேண்டும் தருவாயா...
நட்சத்திரங்களுக்கு
ஒளி கொடுக்க
பெண்ணே கொஞ்சம் வருவாயா...
மேகம் தன் கருப்பு வண்ணம் தான்
தீர்ந்துவிட்டது
உன் கார்குழல் கொஞ்சம் தருவாயா...
என் வீட்டில் கொஞ்சம்
இருட்டி விட்டது...
விளக்கேற்ற நாளை
வருவாயா.....