அம்மா
மைக்ரோ கதை.
“ தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“ நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே ரெண்டு நாளாகுமே? ”
” முயற்சி செய்யிடாப்பா. ”
“ பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில மணித்துளிகள் கழித்து.
அப்பா, நா சனிக்கிழமைதா புறப்பட முடியும். அதுவரைக்கும் காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் ” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.
ந.க.துறைவன்.