எழுத்தாகா எண்ணங்கள்

எழுத்தாகா
எண்ணங்கள்
எப்போதுமே
ஊமையானவை.
பேச மொழி
இருந்தும்
பேசப்படாதவை.
வாழும் சூழல்
ஏற்றுக்
கொள்ளப்பட்ட
பிணைப்புகள்
அனுபவம்
முதிர்ச்சி
பக்குவம்
சுய கௌரவம்
இவை
தாண்டி
பயணிக்க
முடியாதவை..
கட்டமைக்கப்
பட்ட மொழியின்
கூறுகளின்
கட்டுப்பாட்டின்
ஊடாக
உதிர்ந்து விழும்
உண்மைகள்
உருமறைப்பாக
இலை மறை
காயாகி
எதுவுமற்ற
இலக்கியங்கள்
எனும் வட்டத்துள்
தம்மை
வரையறுத்து
தம்மைத் தாமே
ஏமாற்றிக்
கொள்வன..

எழுதியவர் : சிவநாதன் (11-Jul-16, 4:53 pm)
பார்வை : 99

மேலே