சாலை ஓர குழந்தைகள்
தாய் என்னை பெற்றால்
குப்பை தொட்டி என்னை
தத்தெடுத்துக்கொண்டது
என் தேசம் மட்டும்
வளர்பிறையை போல வளர ஏனோ
நான் மட்டும் தேய்பிறையை போல
தேய்ந்து கொண்டிருந்தேன் சமூகத்தின்
நடுவில்
நகரும் நிலவை போலத்தான்
எங்களுக்காக இயற்றும் சட்டமும்
உற்று கவனித்தால் தான் தெரியும்
நிலவும் நகரவில்லை எங்கள்
நிலையும் நகரவில்லை (மாறவில்லை ) என்று
துள்ளி திரியும் மான் போல
கால்கள் இருந்தும் துருப்பிடித்து
கிடக்கிறது கால் வயிறு கஞ்சிக்காக
தார்சாலைகளில்
பட்டாம் பூச்சி போல
பறந்து பள்ளிக்கு செல்லும் வயதில்
பணியிலும் வெயிலிலும் தான் அமர்ந்து
வேடிக்கை பார்க்கிறோம் மற்ற
பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை
ஒரு ஓரமாக
(குழந்தை தொழாளியை தடுத்திடுவோம்
வார்த்தையால் அல்ல செயலால் )