மச்சி உன் ஆளு வருதுடா
உருக்கமான காதல் கதை......
மச்சி உன் ஆளு வருதுடா...
எங்கடா மாப்ள?
அதோ அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா..
ஆமாண்டா என்னையே முறைச்சி பார்த்துகிட்டு வரா மச்சி ...
அவ எங்க பார்த்தாலும் உன்னையே பார்ப்பதா சொல்லுவ ஆளை விடு நான் கெளம்புறேன்.
இரு மச்சி இப்ப போய் என்னா பண்ண போற இருடா ..
நீயுந்தான் மூணு மாசமாஇ நாய் மாதிரி சுத்துற என்னைக்காவது உன்ன பார்த்து சின்னதா சிரிச்சிருக்காளா?
அடப்போடா போன வாரம் அவ வீட்டுக்கே போயிட்டு வந்துட்டேன்.
என்னடா மாப்ள சொல்ற...
அட ஆமாண்டா போன வாரம் அவங்க வீட்டுல கொலு வச்சிருந்தாங்க எங்களையும் கூப்பிட்டிருந்தாங்க நானும் என் அம்மாவும் போயிருந்தோம்டா
டேய் மச்சி கலக்குறடா....
சொல்றத கேளு மச்சி இவள மாதிரி இல்லடா இவளோட அப்பா எப்படி பேசினார் தெரியுமா அவ்வளவு அன்பா பேசுனார் மச்சி .
உன் விஷயம் தெரியாது தெரிஞ்சிருந்தா உன் காது அவர் கையில் இருந்திருக்கும்.
எதையும் நல்லதாவே யோசிக்க மாட்டியாடா?
சரி விடு மச்சி உன் ஆளு உன்கிட்ட அன்னைக்காவது பேசுச்சா.?
மச்சி சிவப்பு கலர் ட்ரெஸ்ல சும்மா ஏஞ்சல் மாதிரி இருந்தாடா.. என் அஞ்சலை மச்சி அவ என் அஞ்சலை டா.
டேய் பேசினியா இல்லையா அதை கேட்டா எததையோ உளறுற .
எங்க மச்சி வழக்கம் போலவே தான் பார்த்தாஇ போய்ட்டா..
நீ இப்படியே ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க தான் மச்சி லாயக்கு..என்னைக்கு தான் தைரியமா பேச போறியோ?
நீ வேணா பாரு மாப்ள
ரெண்டாப்பு முடிச்சி..... மூனாப்பு போறதுக்குள்ள.... என் காதலை அவகிட்ட சொல்றேனா இல்லையானு பாருடா.. இது இந்த கணக்கு புத்தகத்து மேல சத்தியம்டா.....