இதயஅஞ்சலி

அறிவின் ஆசான் நீங்கள்
ஆனந்தத்தின் வாயில் நீங்கள்
இன்முகம் கொண்டவர் நீங்கள்
எம்மதத்தையும் மதித்தவர் நீங்கள்

அன்பை கொடுத்தவர் நீங்கள்
அறிவை வளர்த்தவர் நீங்கள்
அடக்கம் கொண்டவர் நீங்கள்
அழியாப் புகழ் பெற்றவர் நீங்கள்

மாணவர்களின் விடியல் நீங்கள்
மறைந்து போகாத வானவில் நீங்கள்
மகிழ்ச்சியின் இருப்பிடம் நீங்கள்
மனசாட்ச்சியின் பிறப்பிடம் நீங்கள்

எண்ணத்தை விதைத்தவர் நீங்கள்
ஏற்றத்தை கொடுத்தவர் நீங்கள்
சோதனை கடந்தவர் நீங்கள்
சாதனை செய்தவர் நீங்கள்

வல்லரசு விதை விதைத்தாய்
விருட்சம் பெருமுன்பே மறைந்தாய்
அக்கினி சிறகு இப்போ
ஒளிதந்து உயர்த்துகிறது........

காலம் கடந்தாலும்
கடைசிவரை தொடரும் உமது புகழ்.

"இதயஅஞ்சலி" ஐயா.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (26-Jul-16, 8:39 pm)
பார்வை : 344

மேலே