கொலுசு
உன்னைப் பற்றி எழுத சொல்லி
என்னவள் என்னிடம் கேட்டாள்
ஆகட்டும் என்று சொல்லி
நானும் நாட்களை கடத்தி
வந்தேன்
இன்று எந்தன் மனதில்
மகிழ்ச்சி வெள்ளம்
கரை புரண்டு ஓடக்
கண்டேன்
ஆனந்தமாக ஏதாவது
எழுத நானும் துடித்துக்
கொண்டு இருந்தேன்
உடனே நீயும் வந்து
என் முன் நின்றாய்
நேரம் காலம் பார்த்து
இதோ...
உன்னைப் பற்றி
எந்தன் வரிகளில் ....
பெண்களிடத்தில் என்றும்
சொந்தம் கொள்ளும்
உன் மகத்துவமே அலாதி
அவர்கள் வரவை அறியச் செய்யும்
கருவி நீதான் என்பேன்
அந்த நிமிடம் நீ எழுப்பும்
சொக்க வைக்கும் ஒலியை
வர்ணிக்க என்னிடம்
வார்த்தைகள் இல்லை
உந்தன் மதிப்பு என்னவென்று
நாங்களும் நன்று அறிவோம்
பெண்களின் பாதத்தை
காதலித்து திருமணம்
செய்தாய் நீயும்
காதல் திருமணம்
பெரிதும் வெற்றி
பெற்றது
உந்தன் விஷயத்தில்
மட்டும் தான்
உன்னை எங்கள் வீட்டிற்கு
அழைத்து செல்ல
நானும் அவளும் வந்தோம்
வகை வகையான வடிவத்தில்
உன்னை கண்டு வியந்தோம்
மழலை முதல் மாந்தர் வரை
உன்னிடம் உறவாடுவதை கண்டோம்
உந்தன் தத்துவம் என்னவென்று
நாங்களும் நன்றாய் உணர்வோம்
மழலையின் காலில் நீ இருந்தால்
சொக்கிப் போவோம் நாங்கள்
காதலி காலில் நீ இருந்தால்
மயங்கிப் போவோம் நாங்கள்
மனைவியின் காலில் நீ இருந்தாலோ
அடிமை ஆகி விடுவோம் நாங்கள்
முன்பின் தெரியா பெண்களிடத்தில்
உந்தன் ஒலியை நாங்கள் கேட்டால்
மனதும் அறிவும் ஒன்றாய் கலந்து
உன்னை மட்டும் ரசிப்போம் நங்கள்
எங்கள் வீட்டில் உன் வரவு
இருந்தால்
வீட்டில் விஷேஷம் என்று
அர்த்தம்
உந்தன் மதிப்பும் ஏறும்
இறங்கும்
நாட்டின் தன்மை பொருத்து
மனித இனமே விரும்பும்
அணிகலன் என்றுமே
நீதானே.
உன்னைப் பற்றி எழுதி விட்டேன்
என் மகிழ்ச்சியை நானும்
பகிர்ந்து கொண்டேன்