தமிழ் மாணவன்
தாயின் கருவறையில் பிறந்ததிலிருந்து
தமிழ் தமிழென்று தமிழிலேயே
தாலாட்டி சீராட்டி வளர்த்துவிட்டு
பட்டப் படிப்பு பயில்கையிலே
பதினேழு அகவையிலே ஆங்கிலத்தில்
பயிலடா என பத்தி
பத்திகளாக பல பக்கங்கள்கொண்ட
பல புத்தகங்கள் தந்தால்
எப்படி பயில்வான் என்னைப்போலொரு
தமிழ் மாணவன்....