நட்பிற்கு வாழ்த்துக்கவி

மகிழ்ச்சியாய் இனிக்கின்ற
பொங்கல் நீ
மனதில் களங்கமில்லா
திங்கள் நீ

பார் கண்ட செவ்வாய் அல்ல நீ
பாரதியின் செவ்வாய் நீ

தங்க மனம் கொண்ட
பொற்பதன் நீ
தயாள குணம் கொண்ட
அற்புதன் நீ

அறிவில் சிறந்த
கல்வியாளன் நீ
நற்சூழலை செதுக்க நினைக்கும்
கல் வியாழன் நீ

தேசிய விருது பெற்ற
முக்கியப் புள்ளி நீ
புதுவையை தூய்மையாக்கும்
விடி வெள்ளி நீ

மனித உரு கொண்ட கனி நீ
சகுனிகளுக்கு மட்டும் சனி நீ

பகலில் உதிக்கும்
ஞாயிறல்ல நீ
இரவிலும் உழைக்கும் ஞாயிறு


சொல்லின் செல்வரே
உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்

எழுதியவர் : நட்பு (3-Aug-16, 9:35 pm)
பார்வை : 783

மேலே