தினம் ஒரு தத்துவ பாட்டு - 30 = 184

கவலையில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் புனிதன்
எங்க கவலைக்கு மருந்து
“நெப்போலியன்” இருக்கு..!

துன்பமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மனிதன்
பட்ட துன்பத்தை மறக்க
“ஜானிவாக்கர்” இருக்கு..!

இன்பமான மனிதன் எவனோ
அவனே மனிதனில் இனியன்
இன்பத்துள் இன்பம் சேர்க்க
“பேக்பைப்பர்” இருக்கு…!

ஆசையற்ற மனிதன் எவனோ
அவனே மனிதனின் தலைவன்
அவன் ஆசையுடன் அள்ளிப்பருக
"சிக்னேட்சர்” இருக்கு…!

பொறுப்பில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மடையன்
பொறுப்புக்கு இலக்கணம் வகுக்க
“ராயல் சேலஞ்சர்” இருக்கு..!

கோபமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மறவன்
கொடுங் கோபத்தை குறைக்க
“கோல்கொண்டா” இருக்கு…!

நன்றியில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் சனியன்
நன்றி நவில நமக்கு
“மெக்டோவல்” இருக்கு..!


மானமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் மிருகன்
புண்பட்ட மனசுக்கு தெம்பு கொடுக்க
“ஓல்டுமங்கு” இருக்கு..!


பேதமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதரில் முருகன்
வர்க பேதங்களை துடைக்க
“வோட்கா”- இருக்கு..!

நியாயமில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனில் கயவன்
அந்நியாயத்தை தட்டிக்கேட்க
“ஹனிவேர்ட்ஸ்” – இருக்கு..!

தடைப்போடா மனிதன் எவனோ
அவனே மனிதனின் துணைவன்
மனத் தடைகளை தகர்க்க
"எம்ஜிஎம் ஜின்னு" – இருக்கு..!

காதலில்லா மனிதன் எவனோ
அவனே மனிதனின் காதலன்
காதல் தோல்வியை மறக்கடிக்க
“ஜானக்க்ஷா” – இருக்கு..!

எழுதியவர் : சாய்மாறன் (6-Aug-16, 9:08 pm)
பார்வை : 194

மேலே