மதம்

மதம்
======================================ருத்ரா


அறியும் முன் என் தலை மேல் அது.
அறிந்த பின் அது என்
காலின் கீழ் உலகம்.

வேதப்புத்தகம் நிரம்பி வழிந்தது
வார்த்தைகளால்
கடவுளால் அல்ல.

மண்டியிட்டேன்
மண்ணில் விண் தெரிந்தது
இரண்டிலும் மனிதன் இருந்தான்.

எழுதியவர் : ருத்ரா (11-Aug-16, 12:14 am)
Tanglish : matham
பார்வை : 52

மேலே