அதர்மமே தர்மம் ஆகியது!!.
வானத்தை
மேகம்
முற்றுகையிட்டது !
மாய
போர் புரிய.
தளபதி சூரியன்
மறைந்து
போனான்
வெள்ளி
படைகளுடன் .
மேகப்படைகளின்
வெறித்தன
மோதல்
மின்னல்
வெட்டுக்களாய்.
அதிரடி தாக்கு
இடி குண்டு வீச்சு
எல்லா
இடங்களிலும்.
ஊழிக்காற்றின்
ஓல ஒலியில்
மழைத்தாய்
கண்ணீர்.
யுத்தம் ஓய்ந்து
அமைதி
திரும்பி
எங்கும் நிசப்தம்.
போர்க்கள வானில்
வெள்ளை
உடையில்
விசும்பும் நிலவு .
அறிவிப்பின்றி
அதர்ம யுத்தம்
மேகம்
நடத்தியதால்
மின்னல் வெட்டி
இடி யுடன் தாக்கி
இன்னல்
கொடுத்ததினால்,
அன்னை வானம்
அழுத கண்ணீர்
மழையாய்
சிந்தியது
பூமிக்கு
தர்மம் ஆகியது.