13 - 8 - 16 = தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 58 = 191
வெள்ளி நிலா மாடத்திலே
நல்ல வெளிச்சம் தருகிறது..!
மஞ்சள் நிலா மையல்கொண்டு
மார்பில் முத்தம் இடுகிறது...!
இதய நிலா இனியவளாள்
புது இன்பம் பெறுகிறது....!
கனவுநிலா காம காட்சிகளால்
மோட்சம் அடைகிறது..!”
துணிவு நிலா துணையவளை
துரத்திச் செல்கிறது
துரத்திச்சென்று துதிபடித்து
நினைத்ததை முடிக்கிறது
உதய நிலா உரியவனை
உருட்டி எடுக்கிறது
உருட்டிவிட்டு உதட்டிலிட்டு
உயிரே என்கிறது
காதல் நிலா காதலனை
காண ஓடி வருகிறது
ஓடிவந்து காதல் கதைப்படித்து
காமப் போர்வை விரிக்கிறது
ஆண்மை நிலா உள்ளதை
உள்ளபடி சொல்கிறது - அதை
பெண்மை நிலா புரிந்துகொண்டு
பெருமிதம் கொள்கிறது
ஏழ்மை நிலா எளியவனை
ஏங்கி பார்க்கிறது
ஏங்கி பார்த்து துன்பம் தீர்க்க
துணை நிற்கிறது
ஒருமை நிலா ஒருவனையே
ஓதம் செய்கிறது
ஓதம் செய்து மோகம் கொண்டு
தாகம் தணிக்கிறது
அன்பு நிலா சாவியின்றி
காதல் வாசல் திறக்கிறது
அடுத்த வரி பாடும் முன்பே
நிலவை மேகம் மறைக்கிறது.