சுதந்திர தினம்

சித்திரப்பாட்டு
விளையாட்டாய் ஒரு கவிதை. சதுரங்க விளையாட்டில் குதிரை போவதுபோல் பாடப்பட்டது

கொடியொடுங் குமர னெனவணி தாம்வர
விடுதலை பேசும் விதந்தழ லெழுந்தே
தடியடி தாங்கிடும் தன்மை பொருந்தித்
திடமுறும் வீரம்திசைதொழு மறமே

பாடல் சதுரங்க விளையாட்டில் குதிரை போகும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது. படிக்கும் முறை எண்ணிட்டுக்காட்டப்பட்டுள்ளது.எண்ணிட்ட படியே எழுத்தைக்கூட்டிப்பார்க்க பாடல் வரும் இது சித்திர கவியில் ஒன்றாகும்

இதில் குதிரை ட எனற முறையில் தாவுவது போல ஓசையும் பாருங்கள் ‘டகடக டகட’ டகடக டகட’என்று வரும்

இதில் ஒற்றுப் பெயர்த்தல் சித்திரப்பாட்டும் அமைந்துள்ளது அதாவது திசைதொழுமறமே என்பதை திசை தொழும் அறமே என்றும் திசைதொழு மறமே என்றும் ஒற்றுப் பெயர்த்து இருபொருள் கொள்ளலாம்

எழுதியவர் : சு.அய்யப்பன் (16-Aug-16, 4:55 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
Tanglish : suthanthira thinam
பார்வை : 194

மேலே