வாழ்கை தரும் வலிகள்

உறவு தரும் வலிகள்

பிரிவில் அழுந்து தெரியும்

பிரிவை நினைத்தே வாழ்ந்தால்

வாழ்கை தொலைந்து போகும்

பிறப்போடு வருவது இறப்பு

உறவோடு ஒட்டி வருவது பிரிவு

பிறப்பு இறப்பு உறவு பிரிவு

இவை இவைதான் என்றறிந்தால்

வாழ்க்கைப் பயணத்தில்

வலிகள் என்றும் தெரிவதில்லை



o

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Aug-16, 8:52 pm)
பார்வை : 320

மேலே