பெண் அகராதியில் ஆண்

ஆண் அகராதியில் பெண்ணும்
பெண் அகராதியில் ஆணும்
இருப்பது ஞாலத்தில் இயற்கை �!
ஆணும் பெண்ணும் இல்லையெனில்
அகிலம் என்பதும் இருக்காது
வாழ்க்கை என்றும் மலராது !

ஆணுக்குப் பின்னால் பெண்ணென்று
அடிக்கடிக் கூறிடும் வாசகமுண்டு
அதனை மறுப்பவரும் இல்லை !
பெண்ணுக்குப் பின்னும் ஆணும்
உள்ளனர் என்பதை ஒருபோதும்
உண்மை நெஞ்சம் மறக்காது !

பெண்ணியம் போற்றும் ஆணும்
பெண்மையைக் காக்க ஆணும்
பெண்ணை மணக்க ஆணும்
பெண்களைப் பேசிட ஆணும்
இல்லாத நிலையும் உண்டா
கற்பனைக் காட்சிகள் வருமா !

வாழ்க்கை எனும் வாசலை
மிதித்திடத் தேவை இருவரும் !
பெண்மைக்கு மதிப்பே மண்ணில்
ஆண்மகன் ஒருவனை மணந்தால் !
பெண்ணிற்கு உரிமை ரீங்காரம்
ஆண்கள் அளிப்பது அங்கீகாரம் !

பெண்களைப் புகழ்பட வைப்பதிலும்
போற்றிப் பாடுபவர்களும் ஆண்களே !
குடும்பம் நடத்திடும் பெண்களை
நடத்திச் செல்பவர்கள் ஆண்களே !
மென்மை மனமுள்ள பெண்களை
தன்மையுடன் வழிநடத்துபவர் ஆண்களே !

வக்காலத்து வாங்கவில்லை ஆண்களுக்கு
இக்காலத்தில் தேவையில்லை பெண்களுக்கு
எக்காலத்தும் இணைந்த இருபாலினமே
கற்காலத்திலும் இருந்த வாழ்க்கைமுறை !
பொற்காலம் படைத்திடுவோம் அனைவரும்
தற்காலம் படித்து மகிழவே இக்கவிதை !

​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (18-Aug-16, 9:22 pm)
Tanglish : pen agaraathiyil an
பார்வை : 346

மேலே