ஒரு படம் இரண்டு கவிதை
குவியலாய்ப் பிணங்கள்
குலைநடுங்க வைக்கும் !
குமட்டிடும் நாற்றம்
குடல்தனைப் பிடுங்கும் !
குமுறிடும் காற்றில்
குமைந்திடும் உள்ளம் !
குருதியும் உறைய
குறையுயிர்த் துடிக்கும் !
****************************************
கழிவுகளுக்கிடையே
கண்ணீரோடு
காய்ந்த குடலோடு
கழிவுகளாய் நாம் ....!
எனக்கொரு துணையாயுனை
விட்டுவைத்தக்
காலனுக்கு நன்றி !
கலங்காதே ....!
கண்ணுக்குள் வைத்துக்
காலமெல்லாம் காப்பேன் !