சிந்திக்க மறக்காதே
மனிதனின் உடலில் மிகவும் முக்கியமான இரு உறுப்புக்கள் உள்ளன அவை நாக்கும், உள்ளமும் எனலாம் ஏனெனில் உள்ளதால் நினைப்பதை வாயினால் மனிதன் வெளிப்படுத்துகிறான் அவ்வாறு வெளிப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க முடியாது.
தான் விரும்பியவாறு வார்த்தைகளை பேசும் மனிதர்களுக்கு இறைவனின் தண்டனைகள் மீது பயமிருப்பதில்லை என்று கூறலாம் ஏனெனில் இறைவனையும், மரணத்தையும் மறந்து தனது சொல்லும், செயலும் செயற்படும் வகையில் மனிதன் இயங்குகிறான்.
வீணான சிந்தனையினால் வெளிப்படும் வார்த்தைகளை விளையாட்டாக நினைத்துக்கொண்டு மனிதன் பேசுகிறான் ஆனால் அவனது வாயினால் பேசப்படும் அவ்வார்த்தைகள் நன்மை, தீமை எனும் இறைவனின் மதிப்பினால் மனிதனை இடைப்போடுகின்றது.
வாயினால் வெளிப்படும் வார்த்தைகளில் ஒருபக்கம் நன்மையாகவும் மறுப்பக்கம் தீமையாகவும் நடுப்பக்கம் நீதியாகவும் இறைவனிடத்தில் மதிப்பிடப்படுகின்றது என்பதை முதலில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும் இல்லையனில் எமக்கு தான் பிறகு கைசேதம்.